சினிமா செய்திகள்

கோவையை கலக்கும் லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் புரமோஷன் வேலை ஆரம்பமானது! அதன் ஒரு பகுதியாக கோவையின் பிரபல ரேஸ் கோர்ஸ் லைட் டவரில் லியோ படத்தின் நா ரெடி பாடல் ஒளிபரப்பாகியுள்ளது.

குறுகிய காலகட்டத்தில் உச்சத்தை அடைந்த இயக்குநர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன் என அனைத்து கதாபாத்திரங்களையும் விக்ரம் படத்தில் இடம்பெறச் செய்து, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்ஸை உருவாக்கி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, இவரது படத்தில் அடுத்து யார் நடிக்கப்போகிறார்கள்? இவரது LCU-வில் அடுத்து யார் சேரப்போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யுடன் கைகோர்த்து லியோ படத்தை இயக்க ஆரம்பித்தார்.

இப்படத்தில் நடிகர் விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் சார்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் பாடல், போஸ்டர் என அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகளும் சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது சில பேட்ச் ஒர்க் பணிகளும் நடந்துவரும் நிலையில், இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளையும் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பிரபல பாடலான நா ரெடி பாடலானது தற்போது கோவை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் லைட் டவரில் இடம்பெற்றுள்ள நிலையில், வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் அக்டோபர் 19ம் நேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *