விளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்டில் இருந்து விடைபெறப்போகும் தினேஷ் கார்த்திக்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பல போட்டிகளில் விளையாடிவந்த தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். இவருக்கு தற்போது 38 வயதாகும் நிலையில் கடந்த 2022ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி வந்தார்.

அதன்பின்னர், கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கேற்றுவரும் தினேஷ் கார்த்திக், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கெடுத்து விளையாடி வருகிறார்.

தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள், 60 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் வலம்வந்த 38 வயதாகும் தினேஷ் கார்த்திக், தற்போது நடைபெறவிருக்கும் 17வது ஐபிஎல் போட்டிகளில் விளையாடவிருக்கும் நிலையில், அதுமுடிந்தபின்னர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *