Popular Newsவிளையாட்டு செய்திகள்

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதல்!

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதையடுத்து, இன்று 2வது டெஸ்ட் போட்டி துவங்கவிருக்கிறது.

சமீபத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23க்கான இறுதிப்போட்டி நடந்து முடிந்த நிலையில், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான டெஸ்ட் தொடர்கள் தற்போது துவங்கியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தற்போது மோதும் இந்த டெஸ்ட் தொடரும் அடங்கும். அதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்ததையடுத்து, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது 2வது டெஸ்ட் போட்டி இன்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ள நிலையில், இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இன்றைய போட்டி நடக்கவிருக்கும் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் டாஸை வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *