Popular Newsசினிமா செய்திகள்

கங்குவா பட glimbse வெளியீடு எப்போ? அறிவித்த படக்குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ‘கங்குவா’ படத்தின் அடுத்த அப்டேட் குறித்த செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் UV க்ரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பிரம்மாண்டமான பொருட்செலவில் 3D முறையில், 10 மொழிகளில் உருவாகும் இப்படம் சரித்திர படமாக உருவாகவிருக்கிறது.

சூர்யாவுடன், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க, வெற்றி பழனிச்சாமி கலை இயக்குனராகவும், நிஷாந்த் யூசுப் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற உள்ளனர்.

இப்படம் பல நூறு வருடங்களுக்கு முன் நடக்கும் கதையையும் இன்றைய காலத்திற்கேற்றார்போல் நடக்கும் கதையையும் இணைத்து கதைக்களம் அமையவிருப்பதால், சூர்யா வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே வெளியான போஸ்டரில், குதிரை, நாய், கழுகு என விலங்குகளின் ஆதிக்கமும் இருந்ததால், இவைவும் கதையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே படத்தின் டைட்டிலும் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்களும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஜூலை 23ந்தேதி கிளிம்ப்ஸ் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவின் கெட்டப்பை பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் ஒவ்வொரு அப்டேட்டிற்காக காத்திருக்கும் நிலையில், இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *