சினிமா செய்திகள்

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு நடிப்பில் பாட்னர்!

தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துவருவதோடு, வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகர் ஆதி பினிசெட்டி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாட்னர். இப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

2006ல் ஓகே வி சித்ரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, அடுத்து மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அனைவரின் பார்வையையும் தன்மீது விழ வைத்தர் நடிகர் ஆதி.

இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியைத் தழுவினாலும், தமிழில் மிருகம், ஈரம், அரவாண், யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம், யு டர்ன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளன.

இவரது பல படங்கள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படும் நிலையில், தற்போது பாட்னர் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில், இவருடன், ஹன்சிகா மோத்வானி, யோகிபாபு, பாலக் லால்வானி, முனிஸ்காந்த், ஜான் விஜய், ரோபோ சங்கர், பாண்டியராஜன், ரவி மரியா என பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ராயல் ஃபார்ச்சுனா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இது மனோஜ் தாமோதரன் இயக்கும் முதல் படமாகும்.

அறிவியல் சார்ந்த காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஷபீர் அகம்மது ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், சயின்டிஸ்ட்டாக வரும் நடிகர் பாண்டியராஜனின் லேப்பில் இருந்து ஒரு சிப் எடுப்பதற்காக வில்லன்கள் ஆசைப்படுவதும், அதை அடைய ஆதி முற்படுவதும், இதற்கிடையே அவருடன் வரும் நடிகர் யோகிபாபு ஹன்சிகா மோத்வானியாக உருமாறுவதும், என படத்தின் டிரைலர் வித்தியாசமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *