Popular Newsசினிமா செய்திகள்

Jailer audio launch : இசை வெளியீடு குறித்த அப்டேட்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உருவாகியிருக்கும் படம் ‘ஜெயிலர்’. இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னணி நடிகர்களான மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உட்பட பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். சுனில், ஆத்மிகா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில், இப்படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘ஹுக்கும்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது நடக்கும் எனவும் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

காரணம் தலைவர் ரஜினியின் பேச்சு என்பது ரசிகர்களுக்கு காதில் தேன் பாய்வது போல அவ்வளவு இன்பமாக இருக்கும். அவர் பொதுவாக ஆடியோ வெளியீட்டின் போது பேசும் விஷயங்களும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கும்.

ஏற்கெனவே இயக்குநர் நெல்சன் ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ என வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், அவரது இயக்கத்தில் தலைவரின் இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள நிலையில், ரசிகர்களிடைய பெரும் ஆவலைக் கிளப்பியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தலைவர் ரஜினிகாந்த், ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றும் தரமான வீடியோ ஒன்றை வெளியிட்டு, விரைவில் ஆடியோ லான்ச் நடைபெற இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *