சினிமா செய்திகள்

சவுக்கு சங்கர் பயோபிக்கை இயக்குகிறாரா வெற்றிமாறன்? அதுவும் ஹீரோ இவரா?

கோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் அரசியல் விமர்சகராக வலம் வரும் சவுக்கு சங்கர் பயோபிக் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன், கோலிவுட்டில் அன்று முதல் இன்றுவரை இயக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. அவரது இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு வாழ்வியலை வித்தியாசமாக நம் கண்முன் காட்சிப்படுத்தியிருப்பார்.

அதோடு இவரது படங்கள் பலமுறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளன. வெற்றிமாறன் கூட்டணியில் நடிகர் தனுஷ் 4 படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனுடன் மீண்டும் தனுஷ் இணைவாரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில், விடுதலை 2, வாடிவாசல், அடுத்து மீண்டும் தனுஷின் கூட்டணியில் வடசென்னை 2 படம் என படுபிஸியாக இருந்துவருகிறார். மேலும் நடிகர் விஜய்யிடமும் கதை கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது.

அதன்படி, இயக்குநர் வெற்றிமாறன், அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் பயோபிக் படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அந்த பயோபிக் படத்தில் சவுக்கு சங்கர் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அதற்கு தனி வரவேற்பு ரசிகர்களிடையே உண்டு. இவர்களது கூட்டணியில் அனைத்து படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால், சவுக்கு சங்கர் பயோபிக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் பட்சத்தில், இப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *