சினிமா செய்திகள்

திரையுலகே எதிர்பார்க்காத விஷயம்! ‘தலைவர் 171’ படத்தில் இவரா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக நடிக்கும் படம்தான் தலைவர் 171.

இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல், இப்படம் குறித்த அப்டேட்ஸ் ஏதேனும் வராதா? என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தலைவர் 170 படத்தில் தற்போது பிஸியாக நடித்துவருகிறார். அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் லியோ படத்தின் வெற்றிக் களிப்பிலிருந்து விடுபட்டு சற்று ஓய்வில் இருந்துவந்தார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது தலைவர் 171 படத்திற்கான கதை சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, தலைவர் 171 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

காரணம், லியோ வெற்றிக்குப் பின் லோகேஷும், ஜெயிலர் வெற்றிக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இணையும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும், தலைவர் 171 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதும் அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லையென்றாலும், கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதி என்றும் கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *