சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மறுத்த முக்கிய பிரபலம்! காரணம் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் கூட்டணியில் பான் இந்திய திரைப்படம் உருவாகவிருக்கும் நிலையில், இப்படத்தில் நேச்சுரல் ஹீரோ நானி முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த நிலையில், தற்போது அவர் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர்களில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பரபரப்பே இன்னும் முடியாத நிலையில் தலைவர் 170 படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தயாரிப்பில், ஜெய்பீம் வெற்றிப் பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவிருப்பதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது.

அதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. காரணம் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் 32 வருடங்கள் கழித்து மீண்டு இணைந்து நடிக்கவிருப்பதால், அந்தளவுக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நேச்சுரல் ஸ்டார் நானியிடம் பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கும் இந்தக் கதை பிடித்திருந்ததால், விரைவில் ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், ரஜினி-அமிதாப் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு நெகட்டிவ் ரோல் என்பதால் அந்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் நானி நடிக்கவிருந்த அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகக் கருத்துடன் இணைந்து கமர்ஷியல் படமாக திரைக்கு வரவிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில், இப்படம் 2024ம் ஆண்டு கோடையில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *