சினிமா செய்திகள்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியானது!

தி லெஜண்ட் படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான லெஜண்ட் சரவணன் தனது 2வது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

லெஜண்ட் சரவணன், பிஸினஸ்தான் தனது தொழில் என்பதையும் தாண்டி, தனது நிறுவன விளம்பரங்களில் நடித்ததன் மூலமாக மக்களிடையே பிரபலமாகி, அதன்பின்னர் கோலிவுட்டில் தி லெஜண்ட் படத்தின் மூலமும் காலடி பதித்தார்.

லெஜெண்ட் சரவணனே மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்தாண்டு தி லெஜண்ட் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக வெளியானது.

இப்படத்தில் கீதிகா திவாரி, ஊர்வசி ரவ்துலா, மறைந்த நடிகர் விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்திருந்தனர்.

இவரது நடிப்பை பலரும் கேலி செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லாவற்றையும் கடந்து முன்னேறி வந்துகொண்டிருக்கிறார்.

அந்தவகையில், இவருக்கென தனி ரசிகர்கூட்டமும் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, லெஜண்ட் சரவணனும், அடுத்தடுத்து படங்களில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

அதற்கேற்றார்போல், சில மாதங்களுக்கு முன், லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இருந்தவாறு, சில ஃபோட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்த நிலையில், அப்புகைப்படங்களும் மிக வைரலானது.

இந்நிலையில், இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, குழந்தைங்களுடன் அதைக் கொண்டாடிய நிலையில் லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி, ஒரு சிறுவன் அவரிடம் சீக்கிரமா அடுத்த படத்தை ரிலீஸ் பண்ண சொல்ல, அதற்கு பதிலளித்த லெஜண்ட் சரவணன், ஒரு நல்ல கதைக்காக இவ்வளவு நாள் காத்திருந்ததாகவும், இப்போது அப்படிப்பட்ட ஒரு நல்ல கதை அமைந்துள்ளதாகவும், சீக்கிரமாவே எடுத்து முடித்து, ரிலீஸ் செய்துவிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *