ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் முதல் ஏரியல் ஆக்ஷன் படம்!
பதான் திரைப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோனே, அனில் கபூர் நடிப்பில் இந்தியாவின் முதல் ஏரியல் ஆக்ஷன் படம் உருவாகி வருகிறது.
பாலிவுட் நடிகர்களில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன்.
இவர் 1980ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்கத் துவங்கி, பின்னர், 2000ம் ஆண்டில் கஹோ நா பியார் ஹே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இத்திரைப்படம் மாபெரும் பெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றார்.
பின்னர் இவரது நடிப்பில் வெளியான கோய் மில் கயா, க்ரிஷ், தூம் 2, ஜோதா அக்பர், பேங்க் பேங்க், வார் என பல படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில், கடைசியாக அவர் நடிபபில் 2022ம் ஆண்டு விக்ரம் வேதா திரைப்படம் வெளியானது.
இதைத் தொடர்ந்து அவர் ஃபைட்டர் படத்தில் நடித்துவரும் நிலையில், நாட்டுப்பற்றை மையமாகக் கொண்டு மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே, அனில் கபூர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை வார், பதான் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்தியாவின் முதல் ஏரியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் நிலையில், இப்படம் 2024, ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.