சினிமா செய்திகள்

மாஸ் லுக்கிற்கு மாறிய சூரி!

காமெடி நடிகர்களில் பலரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் சினிமாத்துறையில் ஓரளவிற்கு வளர்ந்து காமெடி நடிகர்களாக வலம் வருகின்றனர். அதையும் தாண்டி வெற்றிபெற்ற பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராகவும், தற்போது கதாநாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் சூரி.

ஆரம்ப கட்டங்களில் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும், வெண்ணிலா கபடி குழு படத்தில் இவரது பரோட்டோ காமெடி காட்சியானது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதையடுத்து, பல படங்களில் கதாநாயகர்களுடன் சேர்ந்து முன்னணி காமெடி நடிகராகவும் பல படங்களில் நடித்துவந்தார்.

இந்நிலையில் அவரது பாதையை சற்று அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது விடுதலை திரைப்படம்தான்.

இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பலரும் ஏங்கும் நேரத்தில், இப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு, அதில் நடித்த சூரியின் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாகக் கவர, தற்போது கதாநாயகனாகவும் வலம்வர ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து, தற்போது கொட்டுக்காளி படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தைப் பார்க்கும்போது, இது காமெடி நடிகர் சூரி என்ற தோற்றமோ தெரியாத அளவுக்கு ஒரு கதாநாயகனுக்கான தோற்றத்தில் அருமையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *