விளையாட்டு செய்திகள்

தனது மைதானத்தை பக்குவப்படுத்தி வரும் நடராஜன்!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், கடந்த 23ந் தேதி வெள்ளிக்கிழமை அவருடைய சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை நிறுவியிருந்தார்.

கிரிக்கெட்டில் இவர் தனது அசத்தலான யார்க்கர் பந்துகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்ததோடு, ஐபிஎல் டி20 போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி, கலக்கி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் தான் மட்டும் ஜொலித்தால் போதாது, தனது ஊரைச் சேர்ந்தவர்களும் கிரிக்கெட்டில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு, அவர் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார்.

இதற்கான திறப்புவிழாவில், பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கலந்துகொண்டு மைதானத்தைத் திறந்து வைத்தார். மேலும், இந்த விழாவில் நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு மற்றும் புகழ் ஆகியோரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

இதன் அடுத்தகட்டமாக மைதானத்தைப் பராமரிப்பதும் ஒரு பெரிய வேலைதான். அதற்கான முயற்சிகளையும் நடராஜன் மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் மைதானத்தில் தண்ணீரை குழாய் மூலம் அடிக்கச் செய்து, மைதானத்தை விளையாட்டுக்கேற்றபடி பக்குவப்படுத்தி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *