விளையாட்டு செய்திகள்

2023-24ம் ஆண்டுக்கான இந்திய அணிக்கான ஹோம் சீசன் அட்டவணை வெளியானது!

இந்திய அணி அடுத்தாக, தனது சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர்ந் முடிந்ததையடுத்து 1-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இதையடுத்து நாளை இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்குபெறும் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவிருக்கிறது. 3 ஒருநாள் போட்டிகள் முடிந்தவுடன் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணி தனது சர்வதேச ஹோம் சீசன் 2023-24ல் விளையாடவுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளன.

அதில், ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியத அணி விளையாட உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை போட்டியானது இந்தியாவில் வைத்து அக்டோபர் 5ம் தேதி தொடங்கி, நவம்பர் 19ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள், உலகக்கோப்பைக்கு முன்னதாகவும், மீதமுள்ள அனைத்து போட்டிகளும் உலகக்கோப்பை முடிந்த பின்னரும் நடக்கும் வண்ணம் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ பிசிசிஐ வெளியிட்ட இந்திய ஹோம் சீசன் 2023-24 அட்டவணை :

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள்
(ஒருநாள் போட்டிகள் – பிற்பகல் 1.30 மணி)

முதல் ஒருநாள் போட்டி : செப்டம்பர் 22, மொஹாலி
2வது ஒருநாள் போட்டி : செப்டம்பர் 24, இந்தூர்
3வது ஒருநாள் போட்டி : செப்டம்பர் 27, ராஜ்கோட்

(T20I போட்டிகள் – மாலை 7.00 மணி)
முதல் T20I – நவம்பர் 23, விசாகப்பட்டினம்
2வது T20I – நவம்பர் 26, திருவனந்தபுரம்
3வது T20I – நவம்பர் 28, கவுகாத்தி
4வது T20I – டிசம்பர் 1, நாக்பூர்
5வது T20I – டிசம்பர் 3, ஹைதராபாத்

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள்
(T20I போட்டிகள்)
முதல் T20I – ஜனவரி 11
2வது டி20I – ஜனவரி 14
3வது டி20I – ஜனவரி 17

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள்
(டெஸ்ட் போட்டிகள்)

முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி 25-29,
2வது டெஸ்ட் – பிப்ரவரி 2-6
3வது டெஸ்ட் – பிப்ரவரி 15-19
4வது டெஸ்ட் – பிப்ரவரி 23-27
5வது டெஸ்ட் – மார்ச் 7-11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *