காயத்திலிருந்து மீண்டு தீவிர உடற்பயிற்சி செய்யும் ரிஷப் பந்த் வைரல் வீடியோ!
விபத்தின் காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்துவந்த ரிஷப் பந்த் தற்போது, உடல் தகுதியை எட்டுவதற்காக தீவிர உடற்பயிற்சி செய்துவரும் நிலையில், அதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ரிஷப் பந்த். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது சாலை தடுப்பில் கார் மோதியதில் பயங்கரமான விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது தலை, மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையை மேற்கொண்டார்.
இந்நிலையில் சிறிது சிறிதாக உடல் நலன் தேறி தற்போது ஓரளவிற்கு மீண்டு பழைய நிலையை எட்டி வருகிறார்.
இதையடுத்து, தற்போது அவர் தனது உடல்தகுதியை எட்ட தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து, அவர் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவைக் கண்ட அவரது ரசிகர்கள், ரிஷப் பந்த் விரைவில் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.