Popular Newsசினிமா செய்திகள்

ரஜினியை வைத்து தலைவர் 171-ஐ இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ்!?

பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், படத்தின் மீதமுள்ள பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். இப்படத்தில், தளபதி விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் என மிகப்பெரிய நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உருவாகிவரும் இப்படம் அக்டோபர் 19ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

ஜெயிலர் படம் ‘தலைவர் 169’ படமாக உருவாகியுள்ள நிலையில், அடுத்து ‘தலைவர் 170’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, டிஜே ஞானவேல் ராஜா இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஜெய் பீம் வெற்றிப் படத்தை இயக்கியவராவார்.

இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, ‘தலைவர் 171’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் அவரது அடுத்தபடமாக ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருந்தும் இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி மட்டும் உறுதியானால், ரசிகர்களுக்கு மெகா விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *