Popular Newsசினிமா செய்திகள்

யோகி பாபு காட்டுல மழைதான்!

தமிழ்த்திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இந்நிலையில், நடிகர் யோகி பாபு, வாணி போஜன் இருவரும் இணைந்து ஒரு புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதாமோகன் இயக்கும் வெப் சீரிஸ்தான் ‘சட்னி சாம்பார்’. இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜிஜேந்திரன் எடிட்டிங் செய்ய, அஜீஷ் இசையமைக்கிறார்.

‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘காற்றின் மொழி’, ‘பொம்மை’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்தான் ராதாமோகன். இவரது இயக்கத்தில் முதன்முதலாக நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார்.

நடிகர் யோகிபாபு சிறந்த காமெடி நடிகராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து, சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார்.

ஒரே நேரத்தில் காமெடி, கதாநாயகன் என இரண்டு வெவ்வேறு விதமான கெட்டப்பில் அசத்தி வரும் யோகி பாபுவுடன் முதன்முறையாக வாணிபோஜன் இணைந்து நடிக்கிறார்.

இந்நிலையில், இந்த வெப் சீரிஸின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பித்து, பின்னர் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *