துருவ நட்சத்திரம் 2வது சிங்கிள் புரோமோ வீடியோ உள்ளே…
‘கோப்ரா’, ‘மகான்’, ‘பொன்னியின் செல்வன்’ என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம் சாப்டர் 1 – யுத்த காண்டம்’ படத்தின் 2வது சிங்கிள் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்தில், விக்ரம் மூன்று வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.பார்த்திபன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்டத்திற்கு இசையமைத்துள்ளார்.
எப்படிப்பட்ட வித்தியாசமான கெட்டப்பாக இருந்தாலும், அதற்காக தன்னை அர்ப்பணித்து நடித்துவரும் விக்ரமின் நடிப்பில் தங்கலான், துருவநட்சத்திரம் இரு படங்களும் வேறுபட்ட பின்னணியில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த இருபடங்களும் எப்போது திரைக்கு வரும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, தற்போது துருவநட்சத்திரம் படத்தின் 2வது சிங்கிள் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ‘His name is John’ பாடல் புரோமோ அருமையாக உள்ளது. முழுபாடலும் ரசிகர்களைக் கவரும் என்று நம்பலாம். இதோ புரோமோ வீடியோ…