Popular Newsசினிமா செய்திகள்

சிம்புதேவன் – யோகி பாபு கூட்டணியின் உருவாகும் படத்தின் டைட்டில் வெளியானது!

2009ல இயக்குநர் அமீர் நடிப்புல வெளியான ‘யோகி’ படத்தின் மூலமா திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் யோகிபாபு. அதைத்தொடர்ந்து ‘பையா’, ‘வேலாயுதம்’, ‘யாமிருக்க பயமேன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தாலும், அவருடையி சினிமா வாழ்க்கையில் அவருக்கு ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நெல்சன் இயக்கத்தில் ஒரு ப்ளாக் காமெடி க்ரைம் படமா உருவாகியிருந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தில், ஹீரோவே இல்லாத நிலையில், நயன்தாரா மெயின் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை காதலிக்கும் காட்சி, அவருடன் ஒரு காதல் டூயட் என்று நடிகர் யோகி பாபு அப்போது முதல் மிகவும் பிரபலமானார்.

அதன்பின்னர் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்துவருவதோடு, சில படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.

அந்தவகையில, முதன்முதலாக 2019ல் ‘தர்மபிரபு’ திரைப்படத்தின் மூலமா கதாநாயகனாக யோகி பாபு அறிமுகமானார். அந்தப் படமும் பரவலான வெற்றி பெற்றது. அதன்பின் ‘கூர்கா’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கீ ரோலில் நடித்திருந்தார்.

பின்னர், 2021ல் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மண்டேலா’ படத்திலும் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஓரு பக்கம் காமெடி, ஒரு பக்கம் கதாநாயகன் என படுபிஸியா இருக்கற யோகி பாபு கைவசம் ‘ஜவான்’, ‘ஜெயிலர்’, ‘அயலான்’, ‘கங்குவா’ என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி நிற்க, தற்போது விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் புது படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் இப்படத்திற்கு ‘போட்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘கசட தபற என படங்கள் எல்லாமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ‘போட்’ படமும் மிகப்பெரிய வெற்றிபெறும் என யோகி பாபு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *