விக்ரம்பிரபு நடிக்கும் இறுகப்பற்று!
கோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இறுகப்பற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
2012ல் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. அதன்பின்னர் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துள்ள விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன், பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்கள் வெளியாகின. இப்படங்களும் பரவலான வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், தற்போது அவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்னதி, சானியா ஐயப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை மூன்று ஜோடிகளை மையப்படுத்தி உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி நிறுவனத்தின் கீழ் உருவாகவிருக்கும் நிலையில், யுவராஜ் தாயாளன் இப்படத்தை இயக்குகிறார்.
மேலும் இப்படத்திற்கு மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்ய, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.