சினிமா செய்திகள்

வேட்டை ஆரம்பம்! வெளியான Weapon Teaser! வீடியோ உள்ளே…

நடிகர் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்பன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்திற்குப் பின் நடிகர் சத்யராஜ் கோலிவுட் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

அந்தவகையில், ஜாக்சன் துரை, கடைக்குட்டி சிங்கம், கனா, தீர்ப்புகள் விற்கப்படும், லவ் டுடே, தீர்க்கதரிசி என படங்கள் அனைத்து வெற்றிபெற்றுள்ளன.

தற்போது தமிழில் ஜாக்சன் துரை அத்தியாயம் 2, வெப்பன், உட்பட தெலுங்கில் ஒரு படமும், மலையளத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜாக்சன் துரை அத்தியாயம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படுவைரலனது. அதில் பளபளக்கும் கண்ணாடியை அணிந்தபடி, போலீஸ் அதிகாரி கெட்டப்பில் ஜாக்சன் துரையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

இதையடுத்து தற்போது வெப்பன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை உட்பல பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மில்லியன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, குகன் சென்னியப்பன் இயக்குகிறார். குகன் சென்னியப்பனுக்கு இது 2வது படமாகும்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிவரும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, நாஷ் எடிட்டிங் செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதோ இப்படத்தின் டீசர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *