மாமன்னன் வெளியாகி 2வது வாரத்தில் இந்தியா முழுக்க எத்தனை திரையரங்கில் வெற்றிகரமா ஓடுது தெரியுமா?
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடித்துள்ள படம் மாமன்ன. இப்படம் கடந்த 29ம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
ஜாதி அரசியலை மையப்படுத்தி மாமன்னன் படம் உருவாகியுள்ள நிலையில், இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு குணசித்திர கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அசத்தியுள்ளார்.
மேலும் இப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில்கூட நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார். இந்நிலையில், இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று, நல்ல வசூலையும் குவித்து வருவதோடு, 2வது வாரமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது உதயநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியா முழுவதும் 715 திரையரங்ககளில் மாமன்னன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.