Popular Newsசினிமா செய்திகள்

‘ஜவான்’ ப்ரிவியூ வீடியோ ஒரே நாளில் படைத்த சாதனை!

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் ப்ரிவியு நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து ஒரே நாளில் இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய சாதனையும் படைத்துள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக ‘ஜவான்’ படம் உருவாகியுள்ள நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, ப்ரியா மணி உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூலைக் கடந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் அட்லீ, ஷாருக்கான் கூட்டணி எப்படி இருக்குமோ என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த வேளையில், நேற்று ‘ஜவான்’ ப்ரிவியூ வீடியோ வெளியாகி அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது.

அந்த வீடியோவில் காட்சிக்குக் காட்சி ஆக்ஷன் அதிரடி என படத்தில் நடித்த அனைவருக்குமே ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்படியாக மிகத் தரமாக அட்லீ உருவாக்கியுள்ளதை நம்மால் காணமுடிந்தது.

இந்நிலையில், இந்த ப்ரிவியூ வீடியோ வெளியாகி ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில், இந்த வீடியோ வெளியான அனைத்து சமூகவலைதளங்களிலும் சேர்த்து, 112 மில்லியன் வியூஸ்களை தாண்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரிவியூ வீடியோவைப் பார்த்தபின்னர், ‘பதான்’ வெற்றியைப் போல் ஜவானும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *