சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவுக்குப் பின் தளபதியோட பிளான் என்ன தெரியுமா?

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இப்படத்தின் பேட்ச் ஒர்க் பணிகளும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடக்கவிருக்கின்றன.

எல்லாப் பணிகளும் முடிந்து அக்டோபர் 19ம் தேதி ‘லியோ’ படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய், ‘தளபதி 68’ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்தைத் தொடர்ந்து ‘தளபதி 69’ குறித்த சில அப்டேட்களும் இணையத்தில் உலவி வருகிறது. அதன்படி, இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்படம் செப்டெம்பர் 7ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து, அட்லீ மீண்டும் கோலிவுட் பக்கம் வருவார் என்று ஏற்கெனவே கூறப்பட்ட நிலைல, கிட்டத்தட்ட அது உறுதியாகிவிட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில், ‘தளபதி 69’ படத்துக்கான Pre-production வேலையில் அட்லீ இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதகாவும் கூறப்படுகிறது. இப்படம் தளபதியோட கேரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *