Popular Newsசினிமா செய்திகள்

project k glimpse, டைட்டில் வீடியோ வெளியானது! வீடியோ உள்ளே…

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே ‘ப்ராஜக்ட் கே’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானதுடன் படத்தின் டைட்டில் ‘Kalki 2898 AD’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் கடந்த ரெண்டு நாட்களாவே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுவந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது ‘ப்ராஜெக்ட் கே’ படம் பற்றிய தகவல்தான். அந்தளவுக்கு இப்படத்தின் டைட்டில், க்ளிம்ப்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அதை டிரெண்டிங் செய்து வந்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் 600 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் படம்தான் ப்ராஜெக்ட் கே. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின்தான் இப்படத்த இயக்குகிறார்.

இப்படத்தில் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் கதாநாயகனா நடிக்க, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, ராணா டகுபதி, பசுபதி என பல பிரபலங்களும் நடிக்க, ஆக்ஷன் கலந்த அறிவியல் புனைகதையாக உருவாகி வருகிறது.

இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுவதோடு மட்டுமில்லாமல், பல முன்னணி பிரபலங்களும் இப்படத்தில் இணைந்துள்தால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, மற்றும் ‘ப்ராஜக்ட் கே’-ன்னா என்ன? என்ற டைட்டில் எல்லாம், அமெரிக்காவில் சான்டியாகோ காமிக் கானில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தனர்.

இதையொட்டி, இன்று ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டைட்டில் வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘ப்ராஜெக்ட் கே’ என்பது ‘Kalki2898 AD’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ க்ளிம்ப்ஸ் வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *