சினிமா செய்திகள்

என்னது, த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கறாரா? எந்தப்படம்னு தெரியுமா?

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் த்ரிஷா, தற்போது நடித்துவரும் புதிய படமொன்றில் இரட்டை வேடத்தில் நடித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

1999ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலமாக சிம்ரனின் தோழியாக ஒருசில சீன்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

அதன்பின்னர், 2002ம் ஆண்டு நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி இன்றுவரை பல படங்களில் நடித்துவருவதோடு, முன்னணி கதாநாயகியாகவும் வலம் வருகிறார்.

விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள நடிகை த்ரிஷா, இதுவரை 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், 22 வருட திரைப்பயண வாழ்க்கையைக் கடந்தும், தனது 40 வயதிலும், இளைய தலைமுறை முன்னணி நடிகைகளுக்கு சவால்விடும் அளவுக்கு திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறார்.

அவரது சமீபத்திய படங்களான பொன்னியின் செல்வன், லியோ படங்களில் அவரது நடிப்பு அந்தளவுக்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

இதையடுத்து, தற்போது தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்திலும், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் தக் லைஃப் படத்திலும் நடித்து வரும் நிலையில், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் ராம் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் த்ரிஷா, தற்போது தெலுங்கில் மேலும் ஒரு முன்னணி நடிகர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வாம்பரா என்ற படத்தில்தான் நடிகை த்ரிஷா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகை த்ரிஷா கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கு எனவும் கூறப்படுகிறது.

த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவில்லையென்றாலும், அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், நடிகை த்ரிஷா பல வருடங்கள் கழித்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *