சினிமா செய்திகள்

சந்தானம் நடிப்பில் கிக் படம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் சந்தானம் நடிப்பில் கிக் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆரம்ப காலத்தில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் களமிறங்கி அனைவரையும் கவர்ந்த சந்தானம், பின்னர் படங்களில் காமெடி நடிகராக நடித்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மத்தியில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்ததோடு, தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.

இவரது நடிப்பில் தில்லுக்கு துட்டு, A1, பாரிஸ் ஜெயராஜ் உட்பட பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதையடுத்து சமீபத்தில் வெளியான காமெடி கலந்த த்ரில்லர் படமான டிடி ரிட்டர்ன்ஸ படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து, ஃபார்ச்சூன் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கிக் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், தான்யா கதாநாயகியாக நடிக்க, நடிகர் செந்தில், தம்பி ராமையா, வையாபுரி உட்பட பலர் நடித்துள்ள இப்படம் காமெடி படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள கிக் படம் செப்டெம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *