சினிமா செய்திகள்

இன்று வெளியாகவிருக்கும் சந்திரமுகி 2 பர்ஸ்ட் சிங்கிள்! #Swagathaanjali

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஸ்வாகதாஞ்சலி இன்று மாலை வெளியாகவுள்ளது.

பி.வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சந்திரமுகி.

மலையாளத்தில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான மணிச்சித்திரத்தாழ் படத்தின் ரீமேக்காக உருவாகி வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு என மிகப்பெரிய நடிக பட்டாளங்கள் நடித்திருந்த நிலையில், இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை பி.வாசு தயாரிக்க, ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, ஷ்ருஷ்டி டாங்கே உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்ற, அந்தோணி எடிட்டிங் செய்ய, ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான அனைத்து த்ரில்லர் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது வேட்டையனாக நடித்துளள நிலையில், சந்திரமுகி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதோடு, கங்கனா ரணாவத் இப்படத்தில் சந்திரமுகியாக களமிறங்கியுள்ளார். இவரது முந்தைய படங்களான தலைவி, மணிகர்னிகா, டகட், க்ரிஷ் 3, தனு வெட்ஸ் மனு, குயின் என பல படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவரை சந்திரமுகியாக காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஸ்வாகதாஞ்சலி இன்று மாலை வெளியாகவுள்ளது. ஏற்கெனவே ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, தற்போது ஸ்வாகதாஞ்சலி பாடல் எப்படி இருக்கப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *