சினிமா செய்திகள்

ரோலக்ஸ் : தரமான சம்பவத்தை அரங்கேற்றிய நடிகர் சூர்யா!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக வலம்வருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பின்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் நடிப்பதற்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது கம்பீரமான கர்ஜனையாலும், வித்தியாசமான கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலமும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அந்தவகையில் அவரது சமீபத்திய படங்களான சூரரைப் போற்று, ஜெய் பீம், விக்ரம், அதைத் தொடர்ந்து தற்போது கங்குவா படத்தில் வரலாற்று கதாபாத்திரத்திரம்னு என தொடர்ந்து புதிய கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

விக்ரம் திரைப்படம் வெளியாகி 1 வருடம் ஆன பின்பும்கூட இன்னும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்துவிட்டது.

ரோலக்ஸ் கதாபாத்திர வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் – சூர்யா கூட்டணியில் அடுத்து என்ன படம் வெளியாகும் என ரசிகர்களும் கற்பனையில் மிதக்க ஆரம்பித்தனர்.

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் இயக்கத்தில் லியோ படத்தை இயக்கியுள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 19ந் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா சமீபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பின் போது, ஒரு தரமான அப்டேட்டை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

அப்போது பேசிய அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ‘இரும்பு கை மாயாவி’, ‘ரோலக்ஸ்’ இந்த இரண்டு கதைகளை தான் கேட்டதாகக் கூறியுள்ளார். அதில் எந்தப்படத்தை முதலில் நடிக்கலாம் என தனது ரசிகர்கள் முன்னிலையிலேயே கேட்டுள்ளார்.

மிகுந்த உற்சாகத்தில் இருந்த ரசிகர்களும், ரோலக்ஸ் ரோலக்ஸ் என கூச்சலிட நடிகர் சூர்யாவும் ஓ.கே. சொல்லியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தற்போது செம பார்மில் இருப்பதால், நடிகர் சூர்யாவின் இந்த அப்டேட்டால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *