இணையத்தை அதிரவைத்த ப்ராஜெக்ட் கே பட நாயகன் பிரபாஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ப்ராஜக்ட் கே’. இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை அமெரிக்காவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, நாயகன் பிரபாஸ், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ படத்தை இயக்கியவர்தான் நாக் அஸ்வின். இவரது இயக்கத்தில் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக மிகப்பிரம்மாண்டமான முறையில் ‘ப்ராஜக்ட் கே’ படம் உருவாகிவருகிறது.
அதுமட்டுமில்லாமல் இப்படம் பல நூறு கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, ராணா டகுபதி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துவரும் நிலையில், சில வாரங்களுக்கு முன்புதான் நடிகர் கமல்ஹாசனும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
இது ஒரு ஆக்ஷன் கலந்த அறிவியல் புனைகதையாக உருவாகி வரும் நிலையில், இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க, இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீட்டிற்காக நடிகர் கமல்ஹாசன், நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் அமெரிக்காவில் தரையிறங்கியதையடுத்து, அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில் நடிகர் கமல்ஹாசன் ரிலாக்ஸாக அமெரிக்க தெரு வீதியில் நடந்து செல்கிறார். நடிகர் பிரபாஸ் ஹாலிவுட்டிற்கு செல்லும் பாதையைப் பார்த்தவண்ணம் நிற்கிறார்.
இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ஜூலை 21 அன்று வெளியாகிறது. வீடியோ அமெரிக்காவில் வெளியிடப்படுவதால், இப்படத்திற்கு சர்வதேச தரத்தில் முக்கியத்துவம் கிடைக்கும் எனவும் தெலுங்கு திரையுலகில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில், இன்று ப்ராஜெக்ட் கே படத்தின் நாயகன் பிரபாஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Iron Man கெட்டப் போன்று மாஸ் கெட்டப்பில் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்புக் குழுவினர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட 3 மணி நேரத்திலேயே 2 மில்லியன் பார்வைகளையும் கடந்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. இப்போதே படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.