சினிமா செய்திகள்

தனுஷ் பிறந்தநாள் முன்னிட்டு ரசிகர்களுக்கு தரமான அப்டேட் கொடுத்த படக்குழு!

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம்தான் கேப்டன் மில்லர். இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28ம் தேதி வருவதை முன்னிட்டு, படக்குழுவினர் மாபெரும் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் நடிகர் தனுஷுடன், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் படமாக உருவாகிவுரும் இப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இத்திரைப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தது. அதில் கையில் துப்பாக்கியுடன், சடலங்களுக்கிடையே நிற்கும் தனுஷின் அந்தப் போஸ்டரைப் பார்த்ததுமே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

படத்தின் அடுத்த அப்டேட்ஸ் எப்போது வரும் என ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *