சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தில் ஷங்கர் புகுத்தும் புதிய தொழில்நுட்பத்தால் இளமையாக மாறும் கமல்!

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது இப்படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கமல்ஹாசனை இளவயது தோற்றத்தில் காண்பிக்க D Age டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக, இயக்குநர் ஷங்கர், தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் ‘இந்தியன்’. இப்படத்தில் மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, நெடுமுடி வேணு, செந்தில், கவுண்டமணி, நிழல்கள் ரவி என மிகப்பெரிய நடிகர்பட்டாளமே நடத்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியால் ‘இந்தியான் 2’ படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து படத்தின் பல காட்சிகளும் படமாக்கப்பட்டன.

பின்னர் சில பல பிரச்சினைகளால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முடிந்துள்ளன.

இதையடுத்து இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்காக தற்போது லாஸ் ஏஞ்சல்ல் நகரில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் இளவயது தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசனை திரையில் காண்பிப்பதற்காக, இயக்குநர் ஷங்கர் D Age டெக்னாலஜியை பயன்படுத்த உள்ளார்.

இதன்மூலம் கமல்ஹாசனை இளவயது தோற்றத்தில் திரையில் காணமுடியும்.

இந்த டெக்னாலஜி ஏற்கெனவே ‘M.S. Dhoni: The Untold Story’ படத்திலும், ஷாருக்கானின் ‘Fan’ மற்றும் அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ படத்திலும் இடம்பெற்றுள்ளது.

கோலிவுட்டில் ‘விக்ரம்’ படத்தில் லோகேஷ் கனகராஜ், கமலை இளவயது தோற்றத்தில் காண்பிக்க பயன்படுத்த நினைத்தார். ஆனால் அதன் செலவு பல கோடிகளாகும் என்பதால் அதை கைவிட்டுவிட்டார்.

இந்நிலையில், அந்த டெக்னாலஜியை தற்போது ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தில் செயல்படுத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *