சினிமா செய்திகள்

மிரட்டும் ராகவா லாரன்ஸ்! சந்திமுகி 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வளர்ந்துவரும் நடிகர்களில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் ராகவா லாரன்ஸ். பி.வாசு இயக்கத்தில் இவர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம்தான் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, ஷ்ருஷ்டி டாங்கே உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘சந்திரமுகி’. காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து, இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையடுத்து, 2020ம் ஆண்டு பி.வாசு, ‘சந்திரமுகி’ படத்தின் 2ம் பாகத்திற்கான வேலையில் இறங்கினார். இதையடுத்து, ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் என பல முக்கிய நடிகர்கள் நடிக்க, விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்புகளும் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், இப்படம் வரும் செப்டெம்பர் 19ந்தேதி விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் மிரள வைத்துள்ளது.

தற்போது வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கெட்டப்பில் அசத்தலான கெட்டப்பில் ரசிகர்களை மிரட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ள த்ரில்லர் படங்கள் எல்லாமே ரசிகர்களிடத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘சந்திரமுகி 2’ படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *