அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தின் பாடல் வெளியீட்டு அறிவிப்பு வெளியானது!
அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்தின் பாடல் வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னிந்திய இயக்குநர்களில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குநர் அட்லீ. இவரது இயக்கத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சமீபத்தில் இப்படத்தின் ப்ரிவியு வீடியோ வெளியானது.
பயங்கர ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான ஜவான் படத்தின் ப்ரிவியூ வீடியோ ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்ததோடு, இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் அனைத்து சமூக வலைதளங்களிலும் சேர்த்து 112 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தென்னிந்திய இயக்குநர் அட்லீ, பாலிவுட் கிங் ஷாருக்கான், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மற்றும் அனிருத் கூட்டணியில் இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் இன்று பிற்பகல் 12.50க்கு வெளியாகவுள்ளதாக நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.
அனிருத் இசையில் இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இப்படம் வரும் செப்டெம்பர் 7ம் தேதி உலகெங்கும் திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.