Popular News

மாதவன்-பிரதமர் மோடி! தலையும் தலையும் ஒட்டிய காட்சி! வைரல் புகைப்படம்! எங்கு நடந்தது தெரியுமா?

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதியன்று, பேஸ்டில் டே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சிக்காக, பாரிஸ் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை சிவப்பு கம்பள வரவேற்புடன், அந்நாட்டு பிரதமர் எலிசபெத் பார்னே வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளி மக்களை சந்தித்தபின், தொடர்ந்து அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிகர் இருவரும் உற்சாகத்தோடு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், அன்று இரவு மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த இரவு விருந்தின் போது, இருநாட்டு மக்களுக்கான நல்ல விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டன.

அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் நடிகர் மாதவனும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நடிகர் மாதவன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் நாட்டு பிரதமர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

பிரதமர் மோடியுடன் மாதவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன், இந்த சந்திப்பு குறித்தும் தனது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/Cuusx9lyFwR/?img_index=1

இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *