ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா அதிரடி!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பித்த நிலையில், இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பித்தது. டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதல் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இதையடுத்து, கிரெய்க் பிராத்வெய்ட், சந்தர்பால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சிறப்பான சுழல்பந்து வீச்சு மூலம் இருவரையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் பெரிதாக ரன்களை எடுக்கவில்லை. அலிக் அத்னாஷ் மட்டும் அதிகபட்சமாக 47 ரன்களைக் குவித்தார்.

இதையடுத்து இலங்கை அணி முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகப்டசமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து, இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா களமிறங்கினர்.
இருவரும் நிதானமாக ஆரம்பித்து விக்கெட் இழப்பில்லாமல் ரன்களை சேகரித்து வந்தனர். வெகு நேரமாக வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் போராடியும் இருவரையும் பிரிக்கமுடியவில்லை. நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தாலும், இருவருமே திறமையாக விளையாடி தங்கள்து சதத்தை அடித்தனர்.
இதையடுத்து, ரோகித் சர்மா 221 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில், அலிக் அத்னாஷ் பந்தில் அவுட்டாகி வெளியேற அடுத்து வந்த சுப்மன் கில்லும் வெறும் 6 ரன்களே எடுத்து ஜோமல் வாரிகன் பந்தில் அவுட்டானார்.
இதையடுத்து, ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், கோலி 36 ரன்களுடனும் அவுட்டாகாமல் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி 2ம் நாள் முடிவில், 113 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்களை எடுத்துள்ளது.