தெறிக்கவிடும் வீடியோ! அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1!
விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஷன் சாப்டர் 1. இப்படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துவருகிறார்.
சுபாஸ்கரன், ராஜசேகர், சுவாதி, சூர்ய வம்சி பிரசாத், கோதா, ஜீவன் கோதா இணைந்து தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ்குமார் இசைல ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கு.
வித்தியாசமான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து அருண் விஜய் நடித்து வரும் நிலையில், அவருடைய சமீபத்திய படங்களான தடம், ஓ மை டாக், யானை என அனைத்துமே வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இவரது நடிப்பில் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் எமிஜாக்சன் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நிமிஷா சஜயன், பரத் போபனா உட்பட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்துலதான் இந்த படத்தோட ஷூட்டிங் முடிஞ்சது. விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…