சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர்! வீடியோ உள்ளே!

நடிகர் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வரலாற்றுப் பாணியை பின்னணியாக வைத்து மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் உருவாகிவருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து படத்தின் டீசர் அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

அதன்படி, தனுஷ் பிறந்தநாளான இன்று டீசர் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *