எங்கே எப்போது… இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியை காணலாம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ளது.
அங்கு வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான போட்டிகள் நாளை ஜூலை 12ந்தேதி துவங்கி ஆகஸ்ட் 13 அன்றுடன் முடிவடைகிறது.
அதன்படி நாளை முதல் டெஸ்ட் போட்டி துவங்கவிருக்கும் நிலையில், டொமினிக்காவின் வின்ட்சார் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, அஜிங்யா ரஹானே, கேஎஸ் பரத், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், அக்சார் படேல், நவ்தீப் சாய்னி, முகம்மது சிராஜ், ஷார்துல் தாகூர், ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இப்போட்டி டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஜியோ சினிமா ஆப் மூலமாகக் காணலாம். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கும்.