விளையாட்டு செய்திகள்

22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியை தோற்கடிக்கப் போராடி வரும் ஆஸ்திரேலியா! சமனில் முடிந்த ஆஷஸ் தொடர்!

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்று வந்த மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடர் சமனில் முடிந்துள்ளது.

1882 ஆம் ஆண்டு முதன்முறையாக ‘ஆஷஸ்’ என்ற சொல் நடைமுறைக்கு வந்து, அன்றுமுதல் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அன்று ஆரம்பித்த ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலமான தொடராக பார்ககப்படும் நிலையில், இத்தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதி விளையாடி வருகின்றன.

இத்தொடரில் இதுவரை 345 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இங்கிலாந்து 110 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 142 வெற்றிகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இருந்தும் இரு அணிகளுக்கும் இடையிலான 93 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. மொத்தம் இதுவரை 73 ஆஷஸ் தொடர்கள் நடைபெற்றுள்ளன.

2015ம் ஆண்டு இங்கிலாந்து அணி கடைசியாக ஆஷஸ் தொடரை வென்றது. அதன்பின்னர் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்று கோப்பையை தக்கவைத்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் 16ந் தேதி தொடங்கிய ஆஷஸ் தொடரில் முதல் 2 டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும், 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெறற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

தற்போது 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்யமுடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், இங்கிலாந்து அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரேலியா அணியும் தனது வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்க, கடைசி நேரத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்துவீச்சில், சிறப்பாக ஆடிவந்த ஆஸ்திரேலிய வீரர்களான டாட் மர்ஃபி மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்துள்ளது.

ஆஷஸ் தொடரைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி அதிக முறை ஜெயித்திருந்தாலும், இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி தனது ஆஷஸ் தொடரை கைப்பற்ற 22 வருடங்களாக போராடி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *