விளையாட்டு செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளருக்கு ஓய்வு!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கெதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு கென்சிங்டன் ஓவல் பார்படாஸ் மைதானத்தில் வைத்து துவங்குகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து, தற்போது இந்திய அணி ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.

இப்போட்டியில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி என பேட்டிங் வரிசையில் வழக்கம்போல் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்.

வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டி தொடங்கவிருப்பதால் அந்த தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவது சந்தேகமாகத்தான் உள்ளது. அதனால், இந்திய அணிக்கான விக்கெட் கீப்பரை தற்போது தேர்வு செய்வதிலும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்படப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஐபிஎல் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் இஷான் கிஷனும் இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் ரோகித்தின் சப்போர்ட் இஷான் கிஷனுக்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருவருக்கும் வலுவான சப்போர்ட் இருப்பதால் யாரை இன்று தேர்வு செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேபோல் முகமது சிராஜ்க்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *