சினிமா செய்திகள்

கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

பிரபல நடிகரான கவுண்டமணி நீண்ட இடைவேளைக்குப் பின் புதிய படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1985-2000 காலகட்டத்தில் நகைச்சுவையின் மூலம் மகிழ்வித்த நடிகர்களில் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த முக்கிய நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கவுண்டமணி. அதிலும் இவர் நடிகர் செந்திலுடன் சேர்ந்து நடித்த காமெடிக் காட்சிகள்தான் ஏராளம்.

எடக்குமுடக்கான கேள்வியை செந்தில் கேட்பதும், கோபத்தில் கவுண்டமணி எட்டி உதைப்பதும் என இருவரும் இணைந்து நடித்த ஒவ்வொரு படமும் ரசிக்கும் படியாக இருக்கும்.

கவுண்டமணி படங்களில் காமெடிக் காட்சிகளில் நடித்தாலும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நடிகர் கவுண்டமணி தற்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

முன்னதாக ’49-O’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் நடித்திருந்த கவுண்டமணி, 7 வருடங்கள் கழித்து தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஷாஷி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் ராஜகோபால் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா, வையாபுரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளும் நடிக்கும் நிலையில், இப்படத்தில் நாகேஷின் பேரன் மற்றும் மயில்சாமியின் மகன் என நடிகர்களின் வாரிசுகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பல வருடங்களுக்குப் பின், கவுண்டமணி நடிப்பில் காமெடி கலந்த ஒரு அரசியல் படத்தை விரைவில் திரையில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *