ICC World Cup 2023 டிக்கெட் விற்பனை எப்போ தெரியுமா?
இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான். அதே அளவுக்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி, ஐபிஎல் என போட்டிகளுக்கும் பஞ்சமில்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
மாநிலம் விட்டு மாநிலம் சென்று போட்டிகளைக் கண்டுவருபவர்களும் உண்டு. அதிலும் சிலர் நாடு விட்டு நாடு சென்றும் போட்டிகளைக் கண்டு களிப்பர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் வைத்து 4வது முறையாக உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் இப்போட்டியானது நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் முதல் போட்டி, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
மொத்தம் 10 மைதானங்களில் வைத்து இந்த போட்டிகள் நடத்தவிருக்கும் நிலையில், இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகக்கோப்பை போட்டி தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.