கங்குவா ஒரே நாளில் மிகப்பெரிய சாதனை!
சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் படமான கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியான ஒரே நாளில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம்தான் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் மற்றும UV கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் நிலையில் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
முந்தைய காலத்தையும், இப்போதைய காலத்தையும் இணைத்து சரித்திர படமாக உருவாகிவரும் இப்படம் 3D தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது.
இப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சூர்யாவின் கேரியரில் அன்று முதல் இன்று வரை பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் நடித்துள்ளார். அவை ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது கங்குவா படம் பழங்காலத்தை மையப்படுத்தி அமைந்துள்ளதால், இதில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த வீடியோ ஒரு சாதனையும் படைத்துள்ளது.
க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், க்ளிம்ஸ் வீடியோ வெளியான ஒரே நாளில் 22 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.