இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்! இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி!
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி 438 ரன்களைக் குவித்தனர்.
டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில், இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
இருவருமே நிதானமாக ஆடி வந்தாலும், அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி வந்தனர். இந்நிலையில், முதல் டெஸ்ட்டில் இந்த இருவருமே செஞ்சுரி அடித்த நிலையில், 2வது டெஸ்ட்டில் அரைசதம் கண்டனர். ஜெய்ஸ்வால் 57 ரன்களும், ரோகித் சர்மா 80 ரன்களும் எடுத்து ஆட்டத்திற்கு வலு சேர்த்தனர். சுப்மன் கில் களமிறங்கி அதிரடியை காட்ட நினைத்து 10 ரன்களுக்கு அவுட்டனார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து 121 ரன்களைக் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் அடங்கும்.
தொடர்ந்து இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 61, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 என அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர்.
இதையடுத்து இந்திய அணி 128 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 438 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களைக் குவித்துள்ளது.