96 பட இயக்குநரின் அடுத்த படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகர்கள்!
’96’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் முன்னணி நடிகர்கள் இருவர் இணைந்து முதன்முறையாக நடிக்கவிருக்கின்றனர். அதுகுறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துளளார்.
2018ல், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ’96’. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், 2020ல் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிப்பில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த இரு படங்களையும் இயக்கியவர் பிரேம்குமார். இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடிப்பில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ வெற்றிப் படத்தை இயக்கியவர் ஆவார். இந்நிலையில், ’96’ பட வெற்றிக்கு பின்னர் இவரது படத்தில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அப்டைட்டே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிரேம்குமார் இயக்கும் புதிய படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் அர்விந்த் சாமி இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பேனரின் கீழ் தயாரிக்கப்படவிருக்கும் நிலையில், கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் குறித்த இதர அறிவிப்புகளை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.