தளபதி விஜய், ஷங்கர் இணையும் படமா!? அதுவும் இந்த கதாபாத்திரமா?
தளபதி விஜய் தற்போது லியோ படப்பிடிப்பு மற்றும் தனது டப்பிங் வேலைகளையும் முடித்துள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல்களும் கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட கிராஃபிக்ஸ் பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ், வெளிநாடு செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்து, படம் அக்டோபர் 19 அன்று தியைரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் அடுத்தபடமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து அப்படம் குறித்த தகவல்களும் இணையத்தில் உலவிவரும் நிலையில், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் எனவும் ஒரு தகவல் கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தற்போது இணையத்தில் ஒரு செய்தி ட்ரெண்டாகி வருகிறது.
அதன்படி தளபதி 69 அல்லது தளபதி 70 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், இயக்குநர் ஷங்கர் ஒன்லைன் ஸ்டோரியை விஜய்யிடம் கூறியதும், அது அவருக்கு பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர் ஏற்கெனவே முதல்வன் படத்தில் நடிக்க வைக்க நடிகர் விஜய்யை அணுகியதாகவும், ஆனால், அப்போது அவருக்கு கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்போது ஷங்கர் கூறியுள்ள கதையும் அரசியல் கதையாம். அதனால் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் அரசியல் பாணியில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியிருந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்ப்போம்.