ind vs wi 3rd odi : இஷான் கிஷன், சுப்மன் கில், ஹார்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் அரைசதம்!
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அரைசதத்துடன் 351 ரன்களைக் குவித்தது.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து தற்போது 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெற்று வந்தது.
இதையடுத்து முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 163 பந்துகள் மீதமுள்ள நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 80 பந்துகள் மீதமுள்ள நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதையடுத்து, 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
ஒருநாள் தொடடைர கைப்பற்ற வேண்டுமென்றால் இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில், முதலில் இந்திய அணி களமிறங்கியது.
துவக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாக, இஷான் கிஷன் 77 ரன்களும், சுப்மன் கில் 85 ரன்களும், சஞ்சு சாம்சன் 51 ரன்களும், ஹார்திக் பாண்டியா 70 ரன்களும் எடுத்து, இந்திய அணியில் நான்கு பேர் அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை எடுத்தது.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கிய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், பெரிய அளவில் சோபிக்காத நிலையில், 35.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 39 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.