விளையாட்டு செய்திகள்

முதல் வெற்றியைத் தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 2வது ஒருநாள் போட்டி துவங்கவிருக்கிறது.

நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சில், 23 ஓவரில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷார்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து இந்திய அணி விளையாடிய நிலையில், 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2வது ஒருநாள் போட்டியில் மோத உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் எந்த மாற்றமும் இருக்காது என அறியப்படுகிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்ககலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய போட்டிகளில் சுப்மன் கில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் சற்று அதிரடியை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்திய நேரப்படி, இரவு 7.00 மணிக்கு கென்சிங்டன் ஓவல் பார்படோஸ் மைதானத்தில் இப்போட்டி துவங்கும். இப்போட்டியை ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக கண்டு மகிழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *