மாநாடு நாயகி அடுத்ததா எந்த கேரக்டர்ல நடிக்கிறார் தெரியுமா?
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தற்போது புதிய படமொன்றில் நடித்துவருகிறார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் பிறந்தவரான கல்யாணி பிரியதர்ஷன், 2017இல் வெளிவந்த ‘ஹலோ’ தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததையொட்டி, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது என இரண்டு விருதுகளை வாங்கினார்.
சில படங்களில் நடித்த பின்னர், 2019ம் ஆண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் அவர் நடித்ததன் மூலம் தமிழ்த்திரையுலகில் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார்.
தமிழ்போது நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படமன ‘ஜெனி’ படத்திலும் நடித்துவருகிறார். தமிழில் ஒருசில படங்களில் அவர் நடித்துவந்தாலும், மலையாளத்தில் படுபிஸியாக இருந்துவருகிறார்.
முன்னதாக ‘வாரணே ஆவுஸ்யமுன்ட்’, ‘ஹிரிதயம்’, ‘ப்ரோ டேடி’ என பல மலையாளப் படங்களில் நடித்துவந்துள்ள கல்யாணி ப்ரியதர்ஷன், தற்போது ஆன்டனி என்ற மலையாளப் படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில், மலையாள பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க, இப்படத்தை பல வெற்றிப் படங்களை எடுத்த ஜோஷிவ் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரைப் பார்க்கும்போது, நடிகை கல்யாணி பிரியதர்ஷன், இப்படத்தில் ஆன் மரியா என்ற விளையாட்டு வீராங்கணையாக நடிக்கவிருப்பதாக அறியப்படுகிறது.